search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Myanmar border clashes"

    • நான்சான் நகரின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் சீன மக்கள் காயமடைந்தனர்.
    • சீனர்கள் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    பீஜிங்:

    மியான்மரின் வடக்கில் ராணுவம் மற்றும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு இடையே ஆயுத மோதல்கள் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வருகின்றன. அண்டை நாடான சீனா போர் நிறுத்தத்திற்கான அழைப்பைக் கோரியது.

    இதற்கிடையே, சீனாவின் நான்சான் நகரின் மீது மியான்மர் ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் ஏராளமான சீன மக்கள் காயமடைந்தனர்.

    மியான்மரின் ஆளும் ஆட்சிக் குழுவிற்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையிலான சண்டையின்போது பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதில் 5 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சீனர்கள் தாக்கப்பட்டதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் கூறுகையில், வடக்கு மியான்மர் மோதலில் தொடர்புள்ள அனைத்து தரப்பினரும் உடனடியாக விரோதத்தை நிறுத்திவிட்டு, எல்லையில் அமைதி காக்கவும். அமைதிக்கு ஊறு விளைவிக்கும் மோசமான சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.

    ×