என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Negotiation"
- கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
- பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் அம்பை அருகே தெற்கு பாப்பான்குளம், மணி முத்தாறு, அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, வைராவிகுளம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களில் இருந்து கல்லிடைக்குறிச்சி, அம்பை பகுதிகளுக்கு தினமும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.
இதுதவிர வேலை நிமித்தமாகவும், தொழில் சம்பந்தமாகவும் ஏராள மானவர்கள் அம்பைக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்பவர்களுக்கு குறைவான எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்சில் போதிய இடவசதி இல்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால், தெற்கு பாப்பாங்குளம் பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி தினமும் ஆபத்தான பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததோடு, கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று காலை தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் அரசு பஸ் வழக்கம்போல் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் திடீரென பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.
- நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது.
- இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஜகார்த்தா, ஜூன் 28-
இந்தோனேசியாவின் பொருளாதாரத்தில் சுற்றுலா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை வருமானத்தில் ரஷியா முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக இரு நாடுகள் இடையே இயக்கப்பட்ட நேரடி விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால் அதனை மீண்டும் இயக்க இந்தோனேசியா முயற்சித்து வருகிறது.
ஆனால் நேரடி விமானங்களை இயக்குவதற்கு ரஷியா சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இதுகுறித்து இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்த பிறகு விரைவில் இரு நாடுகள் இடையேயான நேரடி விமானம் மீண்டும் இயக்கப்படும் என இந்தோனேசிய சுற்றுலாத்துறை மந்திரி சந்தியாகா யூனோ கூறினார்.
- பஞ்சாபில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
- பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:
வேளாண் விலை பொருட்களின் குறைந்த பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13-ந்தேதி தொடங்கினர்.
பஞ்சாபில் இருந்து புறப் பட்ட விவசாயிகள் பஞ்சாப்-அரியானா இடையே ஷம்பு எல்லையிலும் கனாரி எல்லையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. விவசாயிகளை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
இன்று 6-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடித்து வருகிறது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாய சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மூன்று முறை நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இன்று 4-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, பியூஸ் கோயல், நித்யானந்த் ராய் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்து உள்ளது.
பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பொதுச் செயலாளர் சர்வன் சிங் பாந்தர் கூறும்போது, அரசுடன் நான்காவது கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டு உள்ளது. மத்திய மந்திரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக கூறியுள்ளது என்றார்.
இந்நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் வருகிற 21-ந்தேதி உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் அறிவித்துள்ளார்.
- அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
- தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
சென்னை:
தமிழக அரசின் போக்குவரத்து தொழிலாளர்கள் வருகிற 9-ந் தேதி ஸ்டிரைக் கில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டனர்.
இதனால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
இதன்படி சென்னை பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சு நடத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் போக்குவரத்து தொழிலாளர்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு கூடுதல் நிதி செலவாகும் என்பதால் அதுபற்றிய விஷயங்களை நிதித்துறையுடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது.
இதற்கு ஒரு நாள் அவகாசம் தேவைப்படுவதால் நாளை (ஞாயிற்றுக் கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதன்படி பல்லவன் இல்லத்தில் நாளை காலை அமைச்சர் சிவசங்கர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதில் அண்ணா தொழிற் சங்கப் பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதன் பின்னர் நாளை மறுநாள் (8-ந் தேதி) தொழிலாளர் நல ஆணையாளரும் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை நாளை மதியம் 12 மணியளவில் நடைபெறுகிறது.
இதற்கிடையே அமைச்சருடன் நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற போக் குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.
பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு அகவிலை படி உயர்வை வழங்குவதுடன் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கான காலக்கெடுவையும் அறிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
கடலூர்:
கடலூரில் பலத்த மழை பெய்த காரணத்தினால் 28-வது வார்டு திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீதேவி நகர், குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழை நீர் குளம் போல் தேங்கியது. இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கவுன்சிலர் சக்திவேல், பா.ஜனதா மாநகரத் தலைவர் வேலு வெங்கடேசன் தலைமையில் நத்தவெளி- சரவணா நகர் இணைப்பு சாலையில் ஆகாய தாமரைகளுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
- பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
- கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட காட்டனந்தல் என்ற கிராமத்தில் கடந்த 10 தினங்களாக குடிநீர் முறை யாக வழங்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை காட்டணந்தல் கிராம மக்கள் தங்கள் ஊரில் கள்ளக்குறிச்சியிலிருந்து ஈரியூர் கிராமம் செல்லக் கூடிய அரசு பஸ்சை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பழனி வேல், ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, துணைத் தலைவர் ஆறுமுகம், கிராம ஊராட்சி செயலாளர் சுப்பிரமணி, மற்றும் சின்ன சேலம் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கிறோம் என உறுதி அளித்தனர். பின்னர் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் காட்டனந்தல் கிராமத்தில் இன்று பரபரப்பு காணப்பட்டது.
- இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகரில் மாநகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி ஆணையாளர் காந்திராஜ் தலைமையிலான ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று நேரில் வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில் கடலூர் கிழக்கு மாவட்ட பா.ம.க. ஊடக பிரிவை சேர்ந்த சதீஷ், போராட்டத்தில் பதட்டம் நிலவுவதாகவும், அனைவரும் உடனே வரவேண்டுமென சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தியதாக கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பா.ம.க. நிர்வாகி சதீஷை கைது செய்தனர். இதனை அறிந்த பா.ம.க. மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை மற்றும் முதுநகர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- திட்டக்குடி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடலூர்:
திட்டக்குடி அருகே100 நாள் வேலை திட்டத்தில் கள ஆய்வின்போது இல்லாத பணியாளர்களுக்கு வருகை பதிவேட்டில் விடுப்பு என குறிப்பிடப்பட்டதால் கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி ற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் உள்ள பணிகளை ஆய்வு செய்வதற்காக மங்களூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து பணியில் இல்லாதவர்களை வருகை பதிவேட்டில் விடுப்பு என அறிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆவட்டி- திட்டக்குடி சாலையில் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.
- 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது.
- போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
கடலூர்:
என்.எல்.சியை கண்டித்து 7 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு அருகே உள்ள கத்தாழை, மும்முடி சோழகன், சாத்தப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களில் கடந்த 1990 முதல் 2009 வரை நிலங்களை என்.எல்.சி.நிர்வாகம் கையகப்படுத்தியது. அந்த நிலங்களுக்கு மறு குடியமர்வு திட்டத்தில் இழப்பீடு வழங்க கோரியும், மத்திய அரசு அறிவித்ததை மாவட்ட நிர்வாகமும், என்.எல்.சி. நிர்வாகமும் வழங்க மறுப்பது ஏன் என கூறி 7 கிராம மக்கள் வளையமாதேவி பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பா ட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோஷங்கள் எழுப்பினார்கள்.
தகவல் கிடைத்ததும் சேத்தியா தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார் மற்றும் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்த மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் மற்றும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ெபாதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 26 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது.
- கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.
கொல்லிமலை:
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பாய்ச்சல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடந்தபட்டி பகுதியில் அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 13 வருடங்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவின்படி நாமக்கல் மாவட்ட வருவாய்துறையின் சார்பில் கோவில் திறக்கப்பட்டது.
ஏற்கனவே வழக்கமாக யார் பூைஜ செய்தார்களோ அந்த பூசாரிகளே பூஜை செய்ய கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக வருவாய்துறை அதிகாரிகள் சார்பில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமிக்க வேண்டும் என அமைதிபேச்சுவார்தையில் தீர்வு செய்யப்பட்டது. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
இதையடுத்து மற்றொரு தரப்பினர் கோர்ட்டு உத்தரவுபடி பூசாரி நியமித்து பூைஜ நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வெளிநடப்பு செய்தவர்கள் நாங்களும் பூசாரி நியமித்து பூைஜ செய்கிறோம் என கோரிக்கை வைத்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழா முடிந்து பிறகு அமைதி பேச்சுவார்தை நடத்தி யாரை நியமிக்கலாம் என முடிவு செய்யலாம் என தெரிவித்தனர்.
இதனால் மோதல் ஏற்பட்டு விடாமல் இருக்க முன்எச்சரிக்கையாக கோவில் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- தமிழ்செல்வன் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
- அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20)கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர். இவர் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் சொந்த ஊரான பண்ருட்டி உட்கோட்டம் புதுப்பேட்டை போலீஸ் சரகம் மணப்பாக்கம் ஊராட்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது மரியாதை செலுத்த வந்த பெரியார் கலை கல்லூரி மாணவர்கள், உறவினர்கள், கிராமத்தினர், அதே ஊராட்சியை சேர்ந்த சுரேந்தர், மாவட்ட தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி சியாமளா சுரேந்தர், மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அரசு அறிவித்த 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அனைவரையும் திரட்டி கடலூர் - மடப்பட்டு சாலை அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர். பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
- கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
- அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்து கட்டினார். கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பிரமுகர்கள் கண்ணனிடம் பேசி, உங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் வீடு கட்டிக் கொள்ளுங்கள், சாலை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கூறினர். இருந்தபோதும் கண்ணன் தொடர்ந்து வீடு கட்டும் பணியை மேற்கொண்டார். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரிடம் (32) முறையிட்டனர். அவரும் வருவாய்த் துறையில் உள்ள நில அளவையரை அழைத்து வந்து கண்ணனுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தார். அப்போது கிராம சாலையில் 4 அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வீடு கட்டக்கூடாதென பஞ்சாயத்து தலைவர் அறிவுறுத்தி சென்றார். இதனை மீறி கண்ணன் மீண்டும் வீடு கட்டவே, ஊர் பிரமுகர்கள் கண்ணனை அழைத்து நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்ணன், அவரது மகன்கள் பொன்மணி (25), வெற்றிவேல் (23), செல்வக்குமார் (19) ஆகியோருடன் வந்தார். 4 அடி ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க ஊர் பிரமுகர்கள் சொன்னதால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது மகன்களை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு சென்றார். தான் கொண்டு சென்ற கடப்பாறை மூலம் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரின் வீட்டை இடிக்க முயற்சித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது மகன்கள் கொடுவா கத்தியால் பஞ்சாயத்து தலைவரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சசிக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு கண்ணன் மற்றும் அவரது 3 மகன்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்மந்தமாக பொன்மணி, வெற்றிவேல், செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணன் எங்குள்ளார் என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்