search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nepal accident"

    • பஸ் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
    • இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் இந்தியர்கள் 40 பேருடன் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

    இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

    தகவலறிந்து போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 14 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.
    • ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது.

    நேபாளம், காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கி சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    ஏர் பைனஸ்டி என்கிற ஹெலிகாப்டர் இன்று பிற்பகலில் நுவாகோட்டின் ஷிவ்புரி பகுதியில் விபத்துக்குள்ளானது.

    இந்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

    இதுதொடர்பாக வெளியான அறிக்கையின்படி, ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சூர்யா சவுர்-7 என்ற மலையில் மோதியுள்ளது.

    விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் மீட்புக் குழுவை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து பிற்பகல் 1:54 மணிக்கு புறப்பட்டதாகக் கூறப்படுகிறது. சூர்யா சவுரை அடைந்த பிறகு, ஹெலிகாப்டர் அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது. ஹெலிகாப்டர் புறப்பட்ட மூன்று நிமிடங்களில் தொடர்பை இழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது

    இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×