search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "office siege"

    • பொதுமக்கள் தர்ணா-பரபரப்பு
    • ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம்,, வாணியம்பாடி நூருல்லாபேட்டை பகுதியில் பொதுமக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். நீர்பிடிப்பு பகுதியான ஏரி கால்வாயில் அவர்கள் வீடுகள் கட்டி உள்ளதால், மழை நீர் ஏரிக்கு செல்ல முடியாத சூழல் நிலவியது. மேலும் மழை நீர் செல்ல வழி இல்லாமல் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் நிலை நீடித்தது.

    இதில் கடந்த 2022-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 20-ந் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம், ஏரி கால்வாய் ஆக்ரமித்து கட்டப்பட்டு இருந்த 47 வீடுகளை இடித்து அகற்றினர்.

    இதில் வீடுகளை இழுந்த 47 குடும்பங்களில் 6 பேருக்கு மட்டும் இலவச வீட்டு மனைகள் வழங்கப்ப ட்டுள்ளது.

    மிதமுள்ள 41 குடும்பத்தினர்கள் இலவச வீட்டு மனை வழங்க கோரி அரசு அதிகாரிகளிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுநாள் வரை அவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட வில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று வாணியம்பாடி சப்- கலெக்டர் அலுவ லகத்தை முற்றுகையிட்டனர். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என கூறி, அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த சப்- கலெக்டர் பிரேமலதா விரைந்த சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஒரு மாதத்திற்குள் இலவச வீட்டு மனைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • ஒன்றிய அலுவலகம் முற்றுகை
    • கிராமமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் 9 கிராமங்களை நகராட்சியில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

    வந்தவாசி அடுத்த சென்னாவரம் மும்முனி, பாதிரி, வெண்குன்றம், மாம்பட்டு, பிருதூர், கீழ்சாத்தமங்கலம், அம்மையப்பட்டு, செம்பூர் ஆகிய கிராமங்களை வந்தவாசி நகராட்சியில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வந்தவாசி நகராட்சியில் 9 கிராமங்களை சேர்த்தால் கிராம பொது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று அந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    9 கிராமங்களை வந்தவாசி நகராட்சியில் சேர்க்கக்கூடாது என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை.
    • திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூர் ஊராட்சியில் 21 மாதங்களாக 100 நாள் வேலை வழங்கவில்லை எனக் கூறி 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமை யிலான போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். தமிழ்நாடு முதல்-அமைச்சர் விழுப்புரத்தில் கள ஆய்வு செய்கிறார். பெரும்பாலான அதிகாரிகள் அங்கு சென்று விட்டனர். அதிகாரிகள் வந்தவுடன் அவர்களிடம் பேசி உங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இன்ஸ்பெக்டர் அசோகன் உறுதியளித்தார். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ×