என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » rocket raja
நீங்கள் தேடியது "Rocket raja"
ராக்கெட் ராஜா மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #RocketRaja
மதுரை:
நெல்லையை சேர்ந்த ராக்கெட் ராஜா கடந்த மே மாதம் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராஜா என்ற ராக்கெட் ராஜா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், சென்னை தேனாம்பேட்டை போலீசார் கடந்த மே 9-ந்தேதி என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். என்னை சிறையில் அடைத்ததை எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.
அதன் பிறகு கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர். இந்த நிலையில் ஜூன் 9-ந்தேதி என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்தனர். முறையான ஆவணங்கள் இன்றி விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்து நெல்லை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
குண்டாஸ் வழக்கு பதிவு தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது பதிவு செய்யப்பட்ட குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராக்கெட் ராஜா மீது பதிந்த குண்டாஸ் உத்தரவில் ஏற்பட்ட காலதாமதத்தை கருத்தில் கொண்டு குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து நெல்லை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். #RocketRaja

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு சென்னையில் கைதான ராக்கெட் ராஜா கோவை சிறைக்கு மாற்றப்பட்டார். #RocketRaja
சென்னை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையைச் சேர்ந்த ராக்கெட் ராஜாவை பல வழக்குகள் தொடர்பாக போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ராக்கெட் ராஜா தங்கி இருக்கும் தகவல் அறிந்து போலீசார் அங்கு சென்றனர்.
துப்பாக்கி முனையில் ராக்கெட் ராஜாவை கைது செய்தனர். அவருடன் இருந்த சுந்தர், பிரகாஷ், நந்தகுமார், ராஜ்சுந்தர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ராக்கெட் ராஜாவை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், ராக்கெட் ராஜாவுக்கு சிறைக்குள் பல எதிரிகள் இருப்பதாகவும் அவர்களை ஏவிவிட்டு ராக்கெட் ராஜாவை தாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ராக்கெட் ராஜாவை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை ராக்கெட் ராஜாவை அவசர அவசரமாக கோவை சிறைக்கு மாற்ற போலீசார் அழைத்து சென்றனர்.
நள்ளிரவு கோவை கொண்டு செல்லப்பட்ட ராக்கெட் ராஜா அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். #RocketRaja

×

X