search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sapling"

    • கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
    • மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240 மரக்கன்று நட்டார்.

    தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார். அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை நேற்று கொண்டாடினார்.

    இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அருகே உள்ள தன்னூர் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240  மரக்கன்று நட்டார். நேற்று மட்டும் தமிழகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நடப்பட்டது. 6 மாதம் தொடர்ச்சியாக 5000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார். நடுவது மட்டுமில்லாமல் அதை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளார்.

    இதுதவிர மரங்களை நடுவதற்கும் தனது அறக்கட்டளை உதவி செய்யும் என்று சௌந்தரராஜா அறிவித்துள்ளார். மக்கள் தங்களது ஊரில் மரங்களை நடுவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால், அவரது குழுவினர் குறிப்பிட்ட ஊரில் மரக்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

    நடிகர் சௌந்தரராஜா மீது கொண்ட அன்பிற்கும், சமூக அக்கறைக்கும் அவரது நண்பர் ஜேப்பியார் பேரன் ஜெய்குமார் (சத்தியபாமா பல்கலைக்கழகம்) மற்றும் அவரது மனைவி Dr சரண்யா ஜெய்குமார் ( Educational Psychologist ) விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.
    • பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வேளாண்மை மாணவர்கள் பள்ளி நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு முடிந்ததும், ஏதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பில் விவசாய பாடத்தை விருப்பப்பாடமாக படித்த மாணவர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.

    விழாவிற்கான மரக்கன்றுகளை பெருந்துறை ரோட்டரி கிளப் வழங்கியது. இவ்வாறு மரங்களை நடுவது மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைகிறது.

    பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை வேளாண் ஆசிரியர் கந்தன் செய்திருந்தார். 

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி:

    தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 30-ந் தேதி ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி தினமாக கொண்டா டப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் சோமம்பட்டியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சிவசங்கர் வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கதிரேசன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கனி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

    வாழப்பாடி அரிமா சங்க செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் செந்தில்குமார், சேலம் மாவட்ட நிர்வாகிகள் உமா, சரவணன், அலெக்ஸ் பிரபாகரன், குமரேசன், பூச்சான், ஓமலூர் குமார், ஊராட்சி மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பூபாலன், ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் 100 நாவல் மரக்கன்றுகளை நட்டனர்.

    ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

    • தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

    தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.

    கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி முன்னிலையில், மாவட்ட மருத்துவ அணி அமைப்பா ளர் டாக்டர் சவுந்தரராஜன் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன் (பேராவூரணி தெற்கு), ரவிச்சந்திரன் (சேதுபாவாசத்திரம் தெற்கு), அயலக அணி மாவட்ட அமைப்பாளர் ஷாஜகான், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், மருத்துவ அணி தொகுதி அமைப்பாளர் ராஜூ, அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் ராணி, ராஜ்மோகன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர். 50 க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்தில் நடவு செய்யப்பட்டது.

    • குறிச்சி ஊராட்சி கட்டிட வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன.
    • பின்னர், பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், வனத்துறை, தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்டம் குறிச்சி ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

    நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் கலந்து கொண்ட பசுமை சகா டிவைனியா மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். மாவட்ட தேசிய பசுமை ப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவி ஜான்சி ராணி, கிராம நிர்வாக அலுவலர் மணிமேகலை ஊராட்சி மன்ற உறுப்பினர் மீனாட்சி சமூக ஆர்வலர்கள் கார்த்திகேயன் மற்றும் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பொதுமக்களுக்கு கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது.

    • பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது
    • நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படுத்துவதால் விரைவில் மரம் வளரும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் நடப்பாண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    இந்த பணியை நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து செயல்படுத்த உள்ளது.

    கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மரக்கன்று வழங்கி பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர், மரக்கன்று நடும் இடங்களை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில்:-

    நகரை பசுமையாக்கவும், ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், காற்று மாசுவை குறைக்கவும் இந்த ஆண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது.

    இதற்காக பூங்காக்கள், ஆற்றங்கரைகள், குடியிருப்பு பகுதிகள் என இடங்கள் தேர்வு செய்ய ப்பட்டு வருகிறது என்றார்.

    இதுகுறித்து பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் கூறுகையில்:-

    பலன் தரும் மகாகனி, வேங்கை, மருது, நிழல் தரும் வேம்பு, புங்கன், முள்ளில்லா மூங்கில் கன்றுகள் நடப்பட உள்ளது.

    நகராட்சி மூலம் தயார் செய்யப்பட்ட நுண்ணுரங்களை பயன்படு த்துவதால் விரைவில் மரம் வளரும்.

    இப்பணியை சேவை அமைப்புகள், தன்னார்வ ளர்கள் மூலம் செய்யப்பட உள்ளது.

    இதனால் நகரம் விரைவில் பசுமையாகும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்றார்.

    நிகழ்வின்போது நகர்மன்ற உறுப்பினர் வசந்த், முன்னாள் கவுன்சிலர் ராமு, சமூக ஆர்வலர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கலை திருவிழாவில் அனைத்து அரசு பள்ளி, மானவர்கள் கலந்து கொண்டனர்.
    • மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

     தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, காளகஸ்தி நாதபுரத்தில் உள்ள தனியார் கலை. அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக கலை திருவிழா போட்டி நடந்துவருகிறது. இந்த கலை திருவிழா போட்டியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி, மானவ_மாணவிகள் பங்கேற்று வருகிறார்கள். நேற்று 2-ம் நாள் போட்டியில் 11,12, பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை காட்டினர். இவர்களின் திறமைகளை நடுவர்கள் அமர்ந்து பார்த்து ஆய்வு செய்து மதிப்பெண் வழங்கி வந்தனர். இந்த கலை திருவிழாவை மாவட்ட கல்வி அதிகாரி அம்பிகாபதி தொடங்கி வைத்தார்.

    பின்னர் மானவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பாராட்டினார்.

    வெற்றி பெற்ற மாணவ மாணவிகள்மாநில அளவில் நடைபெறும் கலைப் போட்டிகளில்பங்கு பெறுவார்கள் என தெரிவித்தனர்.

    இந்த கலை திருவிழாவில், ஏராளமான மானவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை காட்டினர்.

    • ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
    • செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.3 கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் இதை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலோத்துங்கன், சரவண குமார்,உதவி பொறியாளர்கள் நாராய ணசாமி, செங்குட்டுவன், தண்டபாணி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

    செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கூடுதல் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவர் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவல ர்கள் சீத்தாலட்சுமி, வெங்கட சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, சுந்தரபாண்டியன், குமார், ஜெகநாதன், கலா, சுரேஷ், அப்துல்லா மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • கலெக்டர் தொடங்கி வைத்தார்
    • மாவட்ட வனத்துறை‌ சார்பில் நடவடிக்கை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் மாவட்ட வனத்துறை சார்பில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க சாலிடரிடாட் மற்றும் ஸ்விட்ச் ஆசியா ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 600 மரக்கன்றுகள் நடுதல் தொடக்க நிகழ்ச்சி ராணிடெக் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார்.

    ராணிடெக் தலைவர் ரமேஷ் பிரசாத், நிர்வாக இயக்குநர் ஜபருல்லா,பொது மேலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலிடரிடாட் அமைப்பின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நிபுணர் எலியோனோரா அவாக்லியானோ கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

    இதில் சுற்றுச்சூழல் பொறியாளர்கள். ரவிசந்திரன்,சந்திரசேகர், மாவட்ட வனத்துறை அலுவலர் கலாநிதி, வனச்சரக அலுவலர் சரவணபாபு , சாலிடரிடாட் மேலாளர் சுரில் பன்னிர்செல்வம் மற்றும் அதிகாரிகள், தொழில திபர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.

    • 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மன்னார்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் 100 சென்பக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர் பி.ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக ஸ்ரீ ராமானுஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி 100 நாதஸ்வர கலைஞர்கள், மிருதங்க கலைஞர்கள் பங்கேற்ற இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    பின்னர், 100 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு,மன்னார்குடி நகர்மன்ற தலைவர் சோழராசன், நகர செயலாளர் வீரா கணேசன், ஒன்றிய செயலாளர்கள் மன்னார்குடி எஸ்.டி.முத்துவேல் (மேற்கு), சிவா (கிழக்கு), நீடாமங்கலம் ஆனந்த், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.கே.முருகானந்தம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .
    • மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் ஒன்றியம் மொன்னையம்பட்டி பஞ்சாயத்து புனித அந்தோணியார் தொடக்க பள்ளியில் காந்தி ஜெயந்தி விழா நடைபெற்றது .

    இதனை முன்னிட்டு புனித அந்தோணியார் மேல்நிலைப் தஞ்சாவூர் நாட்டு நலப்பணி திட்ட முகாமில் லயன்ஸ் கிளப் ஆப் தஞ்சாவூர் ஆதவன் சங்கம் மற்றும் ஏகம் பவுண்டேஷன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ் முன்னிலையில் 25 மரக்கன்றுகள் நடப்பட்டன .

    மேலும் இயற்கை காய்கறிகள், வீட்டு தோட்டம் அமைத்தல் மற்றும் பள்ளிக்கு தேவையான மூன்று மருத்துவ முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டது.

    மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இவைகள் அனைத்தையும் பாரத சிற்பி டாக்டர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • மாணவரனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கிளை துணை செயலாளர் முகமது கல்பான் தலைமையில் நாச்சிகுளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மக்தப் மதரஸா மாணவர்கள் நாச்சிகுளம் ஏரிகரை பகுதியில் மரகன்று நட்டு இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

    முக்கிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் கிளை தொண்டரனி பொறுப்பாளர் முஜம்மில், மாணவரனி பொறுப்பாளர் ரில்வான், கிளை உறுப்பினர்கள், மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

    ×