search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seizure of 5 kg"

    • மதுரை மாட்டுத்தாவணியில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது தொடர்பாக ஆந்திர பெண் கைது செய்யப்பட்டார்.

    மதுரை

    மதுரை மாவட்ட, நகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து சமூக விரோத கும்பல் கஞ்சா விற்று வருகிறது. இந்தநிலையில் மதுரை மாட்டுத்தாவணி பின்புறம் உள்ள மீன் மார்க்கெட் அருகே கழிவு நீரேற்றும் நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாட்டுத்தாவணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளதுரை, போலீசார் அந்தப்பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு ஒரு இளம்பெண் கட்டை பையுடன் சந்தேகத்திற்கி டமான வகையில் நின்றி ருந்தார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஆனால் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து போலீசார் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் 5 கிலோ 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி யடைந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் ஆந்திர மாநிலம் ராயபுரம் இந்தூர் காலனியை சேர்ந்த லோகேஷ்வர பிரசாத் மனைவி பத்ம சலபக்கா பத்மஸ்ரீ(வயது 32) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து ஏ.டி.எம்கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

    அவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி மதுரையில் சிலரிடம் விற்க வந்துள்ளார். அவரிடம் கஞ்சாவை கொடுத்து அனுப்பியது யார்? மதுரையில் உள்ள கூட்டாளிகள் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×