search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூற்றாண்டு"

    சந்திரன் சிகப்பு நிலாவாக ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை வரும் 27-ம் தேதி பின்னிரவு முதல் நாம் அனைவரும் காணலாம். #LunarEclipse
    கொல்கத்தா:

    சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

    சூரியன், பூமி, நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும்.

    இந்நிலையில், சந்திரன் சிகப்பு நிலாவாக ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணத்தை வரும் 27-ம் தேதி பின்னிரவு முதல் 28-ம் தேதி அதிகாலை வரை இந்தியாவில் உள்ள நாம் அனைவரும் காணலாம்.

    27-ம் தேதி பின்னிரவு 11.54 மணிக்கு தொடங்கும் இந்த கிரகணம், 28-ம் தேதி அதிகாலை  1.52 மணியளவில் சந்திரனை முழு இருள் படர்ந்த சிகப்புநிற ரத்த நிலவாக தோன்ற வைக்கும். அதிகாலை 2.43 மணிவரை மொத்தம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் இந்த நிலை நீடிக்கும்.

    பின்னர், மெல்ல விலக தொடங்கும் இந்த ஆண்டின் மிக நீளமான இந்த கிரகணம் அதிகாலை 3.49 மணிவரை சந்திரனின் ஒரு பகுதியை மறைத்திருக்கும்.

    முழுக்கிரணத்தின் போது சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோமீட்டர்களாக இருக்கும்.

    இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமின்றி, தெற்கு அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரும்பகுதியில் உள்ள நாடுகளில் வாழும் மக்களும் இரவு முழுவதும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. #LunarEclipse
    ×