search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைபர்கிரைம்"

    • மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை இணங்கும்படி கையாளுகிறார்கள்.
    • ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அல்லது தகவலை வழங்குவதற்கு முன், நம்பகத்திற்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும்.

    சென்னை:

    மோசடி நபர்கள் சமீப காலமாக பாதிக்கப்பட்டவரிடம் அவரது மகன், மகள் பண மோசடி அல்லது சைபர் கிரைம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு இருப்பதாக போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் போல் செல்போனில் பேசி மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது தற்போது அதிகரித்து உள்ளது. இது போன்ற சம்பவம் கடந்த வாரம் சென்னையில் நடந்து உள்ளது. இதில் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இணையதள குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குனர் சஞ்சய்குமார் கூறியதாவது:-

    அமலாக்கதுறையினர் அல்லது அதிகாரிகள் எனக்கூறி அழைப்பவர்களின் அடையாளத்தை எப்போதும் சரிபார்க்கவும். அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்த துறையைக் கோரவும். பின்னர் அதிகாரப்பூர்வ தொடர்புகள் மூலம் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அவர்களின் அடையாளத்தை சுயமாக சரிபார்க்கவும்.

    குடும்ப உறுப்பினர் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி உங்களுக்கு அழைப்பு வந்தால், பீதி அல்லது பயத்திற்கு ஆளாகாமல் அமைதியாக இருக்கவும்.

    மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை இணங்கும்படி கையாளுகிறார்கள். ஏதேனும் நடவடிக்கை எடுப்பதற்கு முன் அல்லது தகவலை வழங்குவதற்கு முன், நம்பகத்திற்குரியதா என்பதை உறுதிப்படுத்தவும்.

    சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் குடும்ப உறுப்பினரைத் தொடர்பு கொண்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பிடத்தைச் சரிபார்க்கவும். தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு பதிலளிக்கவோ அல்லது பணம் அனுப்பவோ வேண்டாம்.

    இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ல் புகார் செய்யலாம். அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப்பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரஷியா முதலிடம் பிடித்துள்ளது. உக்ரைன் 2-வது இடத்தையும், சீனா 3-வது இடத்தையும், அமெரிக்கா 4-வது இடத்தையும் பிடித்துள்ளன.
    • ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப சைபர்கிரைமின் மையமாக விளங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சர்வதேச குழு ஒன்று உலகளவில் இணையதள குற்றச்சாட்டுகள் அதிக அளவில் நடைபெறும் நாடு எது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டது. ரான்சம்வேர், கிரெடிட் கார்டு திருட்டு மற்றும் மோசடி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வாக இது இருந்தது.

    இதில் ரஷியா முதலிடம் பிடித்துள்ளது. உக்ரைன் 2-வது இடத்தையும், சீனா 3-வது இடத்தையும், அமெரிக்கா 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. நைஜீரியா 5-வது இடத்தையும், ருமேனியா 6-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    வடகொரியா 7-து இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 8-வது இடத்தையும், பிரேசில் 9-வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியா 10-வது இடத்தை பிடித்துள்ளது.

    ரஷியா மற்றும் உக்ரைன் ஆகியவை மிகப்பெரிய அளவில் தொழில்நுட்ப சைபர்கிரைமின் மையமாக விளங்கியது ஆய்வில் தெரியவந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்தவர்கள் தொழில்நுட்ப சைபர்கிரைமில் குறைந்த அளவே ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    • பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும்.
    • வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    சென்னை:

    சென்னை போலீசில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக 'அவள்' என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பெண்களுக்கான சைபர்கிரைம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கு சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில் சைபர் கிரைம் துணை கமிஷனர் கீதாஞ்சலி கலந்து கொண்டு பேசினார். 1,500 மாணவிகள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பாக அவர் விளக்கி கூறியதாவது:-

    இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஊடகங்கள் மூலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் மூலமாக போலியான ஆபாச வீடியோக்கள் தயாரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. எனவே பெண்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக இருக்க வேண்டும். தேவையில்லாத பட்சத்தில் தங்களது புகைப் படங்களையோ, வீடியோக்களையோ பகிராமல் இருப்பதே நல்லது. வாட்ஸ்-அப், டி.பி.க்கள், முக நூலிலும் புகைப்படங்களை தவிர்க்கலாம்.

    ஒருவேளை சமூக ஊடகம் மூலமாக யாராவது தேவையில்லாத செய்தி களை அனுப்பினால் உடனே மனம் உடைந்து போகாமல் போலீசாரை அணுக வேண்டும். மனதில் தவறான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் தைரியமாக போலீசை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அவள் திட்டம் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு இதுவரை 1,500 பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    • அப்பாவி பொதுமக்களை யூடியூப் மற்றும் முகநூல் மூலம் தொடர்பு கொண்டது இந்த கும்பல்,
    • சீனாவை சேர்ந்த 3 பேர் இதில் தொடர்புடையவர்கள்.

    ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சிவா ஆன்லைனில் ரூ.28 லட்சம் இழந்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ஐதராபாத் போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சீனாவை பின்புலமாக கொண்டு இயங்கும் ஒரு கும்பல் செய்த ரூ.700 கோடி அவரை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. இது சம்பந்தமாக 9 பேரை கைது செய்திருக்கிறது. இந்த மோசடியின் ஒரு பகுதி பணம் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பிற்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், சீனாவை மையமாக கொண்டு செயல்பட்ட கெவின் ஜுன், லூ லேங்க்ஷோ மற்றும் ஷாஷா எனும் 3 பேரின் தொடர்பில் இந்தியாவில் சிலரின் துணையோடு இந்த கும்பல் செயல்பட்டிருக்கிறது. அப்பாவிகளுக்கு இணையதளத்தில் சில சிறு சிறு வேலைகளை முடித்து கொடுக்க சொல்லி அதன் மூலம் மோசடியை செயலாக்கியிருக்கிறது.

    கைது செய்யப்பட்டவர்களில் பிரகாஷ் பிரஜாபதி மற்றும் குமார் பிரஜாபதி எனும் அகமதாபாத் நகரை சேர்ந்த இருவர்தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டிருக்கிறார்கள்.

    பல போலி நிறுவனங்களின் பெயரில், 48 வங்கி கணக்குகளில் ரூ.584 கோடி செலுத்தப்பட்டுள்ளது. தொடர் விசாரணையில் மேலும் ரூ.128 கோடி பல வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்யப்பட்டதும் தெரிய வந்தது. சுமார் ரூ.700 கோடிக்கும் அதிகமான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த மோசடியில் அப்பாவி பொதுமக்களை யூடியூப் மற்றும் முகநூல் மூலம் தொடர்பு கொண்ட இந்த கும்பல், சில எளிதான இணைய வேலைகளை செய்து தந்தால் நிறைய பணம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு சிறிய அளவில் பணத்தையும் கொடுத்திருக்கின்றனர். பகுதி நேர ஊதியமாக கருதி பலர் இதில் இறங்கியுள்ளனர். சிறு அளவில் பணத்தை முதலீடு செய்தால் மிக நல்ல வருவாய் வரும் என ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பிய பலரும் பணத்தைச் செலுத்தியுள்ளனர். குறைந்த பட்சமாக ரூ.5 லட்சம் தொடங்கி பல லட்சம் மோசடி செய்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக மேலும் பலரை ஐதராபாத் காவல்துறை தேடி வருகிறது என தெரிவித்தனர்.

    • ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.
    • தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற்று பணத்தை பறிக்கும் வட மாநிலத்தவர்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் பிரபலமான உணவு டெலிவரி நிறுவனங்களின் பெயரைச் சொல்லி பொதுமக்களின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசும் வடமாநில வாலிபர்கள் உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உணவு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்று கூறி வலை விரிக்கிறார்கள்.

    எதிர்முனையில் பேசும் பொதுமக்கள், நாங்கள் உணவு ஆர்டர் செய்யவில்லையே என்று கூறியதும்... என்ன சார் இப்படி சொல்றீங்க... உங்கள் செல்போனில் இருந்துதானே ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் இப்படி சொன்னால் எப்படி? என்று எதிர்கேள்வி கேட்கும் வடமாநில வாலிபர் சரி... உணவை நான் கேன்சல் செய்து கொள்கிறேன். உங்கள் நம்பருக்கு ஓ.டி.பி. வரும் அதை சொல்லுங்கள் என்பார்.

    அதேபோன்று சம்பந்தப்பட்ட நபரின் சொல்போனுக்கு ஓ.டி.பி. எண் வந்ததும் எதிர்முனையில் பேசிக் கொண்டு இருக்கும் வட மாநில வாலிபர் அதனை கூறுமாறு சொல்வார்.

    ஓ.டி.பி. எண்ணை சொன்ன அடுத்த நொடியே வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போயுள்ளது.

    இப்படி ரூ.20 ஆயிரம் ரூபாயை ஒருவர் பறி கொடுத்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பொது மக்களை உஷார்படுத்தி உள்ளனர். உங்கள் செல்போனுக்கு இதுபோன்று யாராவது தொடர்பு கொண்டு பேசினால் அதனை கண்டு கொள்ளாமல் தொடர்பை துண்டித்து விடுங்கள்.

    அதுதான் நல்லது. இல்லையென்றால் நீங்கள் பணத்தை இழப்பது உறுதி என்று போலீசார் தெரிவித்தனர். எப்போதுமே தேவையில்லாமல் வரும் அழைப்புகளை உதாசீனப்படுத்தி விடுவதுதான் நல்லது என்றும் சைபர்கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.

    • சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் சமூக வலைதளத்தில் உருவாக்கி உள்ளனர். பின்னர் அதன் மூலம் பணம் உதவி கேட்டு தகவல் அனுப்பி உள்ளனர்.
    • என்னை தொடர்பு கொண்டு கேட்டபோது தான், போலி கணக்கு பற்றிய விவரம் தெரியவந்தது. எனவே யாரும் பணம் அனுப்ப வேண்டாம்

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை சிலர் சமூக வலைதளத்தில் உருவாக்கி உள்ளனர். பின்னர் அதன் மூலம் பணம் உதவி கேட்டு தகவல் அனுப்பி உள்ளனர்.

    இது பற்றி தெரிய வந்த தும் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை தொடங்கி உள்ளனர்.

    போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயன்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சமூக விரோதிகள் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி உள்ளனர். அதன்மூலம் பண உதவி கேட்டு பலருக்கும் தகவல் அனுப்பி உள்ளனர்.

    இதனை பார்த்தவர்கள், என்னை தொடர்பு கொண்டு கேட்டபோது தான், போலி கணக்கு பற்றிய விவரம் தெரியவந்தது. எனவே யாரும் பணம் அனுப்ப வேண்டாம். யாராவது பணம் வழங்கினால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×