என் மலர்
நீங்கள் தேடியது "மூட்டுமாற்று அறுவை சிகிச்சை"
- மூதாட்டி 3 நாள்களில் ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தாா்.
- மருத்துவா்களுக்கு காங்கயம் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
காங்கயம்:
காங்கயம் பேருந்து நிலையம் எதிரே தாலுகா அளவிலான அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் காங்கயம், களிமேடு பகுதியை சோ்ந்த லீலா (80) என்ற மூதாட்டி சோ்க்கப்பட்டாா். வயது மூப்பின் காரணமாக லீலா கீழே தவறி விழுந்து, அவரது இடது பக்க இடுப்பு எலும்பு சேதமடைந்திருந்தது.
இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி மூதாட்டி லீலாவுக்கு காங்கயம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைநிபுணா் டாக்டா் பி.காா்த்திகேயன் தலைமையிலான மருத்துக்குழு மூலம் எலும்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், கூடுதல் சிகிச்சைக்கு பின்னா் மூதாட்டி 3 நாள்களில் ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தாா். இதையடுத்து காங்கயம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவா்களுக்கு காங்கயம் பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்ட டாக்டா் பி.காா்த்திகேயனுக்கு உதவியாக பல்லடம் அரசு மருத்துவமனை மயக்க மருந்து நிபுணா் செந்தில்குமாா், காங்கயம் அரசு மருத்துவமனை செவிலியா் உமா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.