search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமச்சந்திரன் ஆய்வு"

    • பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.
    • தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்

     ஊட்டி:

    குன்னூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மற்றும் சிவில்சப்ளை குடோனில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டுறவு பண்டகசாலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி எவ்வாறு வழங்கப்படுகிறது. அரிசி நல்ல அரிசியாக வழங்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது,

    எத்தனை கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது, கோதுமை மற்றும் பருப்பு எத்தனை கிலோ வழங்கப்படுகிறது, எத்தனை கிலோ கடைகளில் இருப்பு உள்ளது, மண்எண்ணை எத்தனை லிட்டர் ஒரு குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது, எந்த நாளில் மண்எண்ணை வழங்கப்படுகிறது என்று பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.

    கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசியை எடுத்துபார்த்து ஆய்வு செய்தும் பருப்பு மற்றும் கோதுமையையும் ஆய்வுமேற்கொண்டார். சில கடைகளில் தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்

    தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வரும் நிலையில ்பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றை எலிகள் வீணாக்குவதை கூட்டுறவு கடை நடத்தும் கடைக்காரர்கள் அதனை தடுக்காமல் வீண் செய்து வருவதை கண்டித்து எச்சரிக்கை செய்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

    நீலகிரி மாவட்ட கலெக்டர்அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகரசபை தலைவர் சீலா கேத்தரின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.  

    ×