என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "2 பேர் சாவு"
- நேற்று மது அருந்தி விட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- எதிர்பாராதவிதமாக கிணற்றின் அவர் தவறி விழுந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகேயுள்ள முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது40). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில் நேற்று மது அருந்தி விட்டு அதே பகுதியில் உள்ள கிணற்றின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே இர்பான் உயிரிழந்தார்.
இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள சரகப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரவி (45). கட்டிட மேஸ்திரியான இவர் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வாடமங்கலம் ஏரிக்கரை பாலத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி விழுந்தார்.
இதில் சம்பவ இடத்திலேயே ரவி உயிரிழந்தார். இது குறித்து தளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் உள்ள சென்டர்மீடியனில் மோதியது.
- ஆனால் செல்லும் வழியில் அருணா பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாறம்பள்ளியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அருணா (வயது35). இவரது மகன் அஸ்வின்குமார் (19). இவர் பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தாய் அருணா, மகன் அஸ்வின்குமார் இருவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி-சென்னை தேசியநெடுஞ்சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். இதில் வண்டி கட்டுப்பாட்டை இழந்து நிலைத்தடுமாறி சாலையில் உள்ள சென்டர்மீடியனில் மோதியது.
இதில் காயமடைந்த தாய், மகன் 2 பேரையும் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அருணா பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அஸ்வின்குமார் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்காளம உத்தாங்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தருண்தேவ் சர்மா (20). கூலித்தொழிலாளியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கொத்தகொண்டப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக அருண்தேவ் சர்மாவின் பின்னால் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
- சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் வசந்தகுமார் (வயது33). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று சூளகிரி அருகே காமன்தொட்டி மேம்பாலம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டீபன் வசந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம், கொண்டலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது53). இவர் நெடுங்கல்-காவேரிப்பட்டணம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எழுமலையான்கொட்டாய் என்கிற இடத்தின் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த வாகனம் எதிர்பாராதவிதமாக இருச்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முனியம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முனியம்மாள் உயிரிழந்தார்.
இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று அவர் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார்.
- அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.
கிருஷ்ணகிரி,
திருச்சி மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது55). கட்டிட மேஸ்திரியான இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஓசூர் சிப்காட் போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து முத்துவின் உடலை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோன்று தெலுங்கனா மாநிலம் வராங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கொரண்ட பத்ரய்யா (52). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சோமநாதபுரம் பகுதியில் ஓசூர்-கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலை அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கொரண்டபத்ரய்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
- மனமுடைந்த காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் எல்லப்பா. இவரது மனைவி மஞ்சுளா (வயது38). இவர் ஓசூரை அடுத்த கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த காணப்பட்ட மஞ்சுளா தென்பெண்ணையாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியை அடுத்த தின்னூரை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது31). எலக்ட்ரீசியன். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது தாயார் தியாகராஜனை திட்டியுள்ளார். இதன்காரணமாக மனமுடைந்து காணப்பட்ட அவர் அத்திவாடி ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- குடும்பத் தகராறு காரணமாக இவருடைய மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பிரிந்து குமரேசன் தனியாக வாழ்ந்து வந்தார்.
- மனம் உடைந்து காணப்பட்ட குமரேசன் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள செஞ்சி நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது48). கூலி தொழிலாளி.
இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இவருடைய மனைவி மற்றும் குழந்தையை பிரிந்து பிரிந்து குமரேசன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட குமரேசன் கடந்த 17ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்தங்கரை அருகே உள்ள குள்ளவேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திரன் (வயது 46). இவருக்கு நீண்ட நாட்களாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவருக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று மன விரக்தி அடைந்த உத்திரன் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உத்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவித மாக மோதியது.
- இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இறைவன். இவரது மகன் சூர்யா என்கிற எட்வட் (வயது23). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 மாத குழந்தை உள்ளது.
இந்த நிலையில் எட்வட் அரூர்-மோபிரிப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு எட்வட் வேலையை முடித்து விட்டு தனது நண்பர் தளித்சேட்டு மகன் அம்பேத்கர் செல்வன் (18) பிளஸ்-2 மாணவன் என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார்.
அப்போது அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவித மாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை க்காக அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய லாரி-இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்து ஏற்படுத்தி நிற்காமல் தப்பி சென்ற காரை பிடிக்க தீவிரம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த சின்ன அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி.இவரது மகன் கோகுல் (வயது 25).இன்னும் திருமணம் ஆகவில்லை. போளூர் அடுத்த வெள்ளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வெங்கடேசன் (23).
நேற்று 2 பேரும் தங்களது பைக்கில் வேலூர் -திருவண்ணாமலை சாலை, காந்திநகர் ஏரிக்கரை மீது வந்து கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் அடுத்தடுத்து 2 பைக்குகள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கோகுல், வெங்கடேசன் இருவரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல் உடைக்கும் தொழில் செய்து வந்தனர்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த கோரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). கட்டிட தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் சாமி ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜி (42) கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் பைக்கில் நேற்று மாலை கோரந்தாங்கள் பகுதியில் இருந்து திருவலம் நோக்கி காட்பாடி திருவலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செம்பராயநல்லூர் அருகே வந்தபோது அரக்கோணத்தில் இருந்து திருவலம் வழியாக காட்பாடி நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மகேந்திரன், ராஜி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்