என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 பேர் காயம்"

    எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன், என்பவர் தனது மகன் சரவணன் மற்றும் அவரது நண்பரான சென்னை படப்பை திரு.வி.க. நகரை சேர்ந்த வாசுதேவன் ஆகியோரை காரில், கேரளா மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் விருத்தாசலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    நேற்று மாலை கடலூர் மாவட்டம், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சா லையில், வேப்பூர் அடுத்த அரியநாச்சி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் வெடித்து சென்டர் மீடியனை தாண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை மார்க்க சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    அதில், காரில் பயணித்த விருத்தாசலம், பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மகன் சரவணன், சென்னை அடுத்த படப்பையைச் சேர்ந்த வாசுதேவன், ஆகி யோர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

    • டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது.
    • பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி, காடாம்புலியூரிலிருந்து அரசு பஸ்ஒன்றுபண்ருட்டி நோக்கி வந்தது.பண்ருட்டி அருகேபணிக்கன்குப்பம் ஆர்.டி.ஓ. அலுவலகம் வந்து கொண்டிரு ந்தபோதுதிடீரென்று முன்பக்க டயர்பயங்கர சத்தத்துடன் வெடித்தது.இதனால் பஸ் தறிகட்டு ஓடியது. இந்த விபத்தில் பெண் பயணி ஒருவர் உள்பட 2 பேர் பஸ்சுக்குள் மயங்கி விழுந்தனர். இவர்கள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதே போல விருத்தாச்சலத்தில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் தனியார் பஸ் ஒன்று அரசு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்தது. இதில் பயணம் செய்த தனியார் நிறுவன ஊழியர் குறிஞ்சிப்பாடிகண்ணாடி சேர்ந்த கிருஷ்ணமூர்த்திஎன்பவர் பஸ்சுக்குள் விழுந்து காயமடைந்தார். அவரை பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    ×