என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்பெயின் பாராளுமன்றம்"
- இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை.
- எல்.ஜி.பி.டி.க்யூ.+ சமூகத்தின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் சட்டத்திற்கும் ஒப்புதல்
மாட்ரிட்:
ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய இந்த மசோதா, வாக்கெடுப்புக்கு பின் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 185 உறுப்பினர்களும், எதிராக 154 பேரும் வாக்களித்தனர். மூன்று பேர் வாக்களிக்கவில்லை. இந்த வாக்கெடுப்பு பிரதமர் பெட்ரோ சான்செஸின் சோசலிச அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவை இதுவரை எந்த ஐரோப்பிய நாடுகளும் எடுத்ததில்லை. இந்த பெருமையை பெற்ற ஒரே ஐரோப்பிய நாடு ஸ்பெயின் மட்டும் தான்.
இதேபோல் எல்.ஜி.பி.டி.க்யூ.+ சமூகத்தின் உரிமைகளுக்கான பாதுகாப்பை வலுப்படுத்தும் மற்றொரு சட்டத்திற்கும் ஸ்பெயின் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.