என் மலர்
நீங்கள் தேடியது "பள்ளத்தால் பொதுமக்கள் அவதி"
- விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- பணி தொடர்பான முன்அறிவிப்பு பலகை இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது
அணைக்கட்டு:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இடையஞ்சாத்து பகுதி ஜெயராம் நகரில் பாலகிருஷ்ணன் தெரு, கண்ணன் தெரு, துரைசாமி தெரு மற்றும் கன்னியம்மாள் தெரு உள்ளிட்டவைகள் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 250 குடியிருப்புகள் உள்ளனர். இந்த பகுதியில் சாலையின் நடுவே மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. மழைநீர் கால்வாயை கடந்து பொதுமக்கள் செல்ல தரைப்பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக கடந்த 1 மாதத்திற்கு முன்பு சாலையின் நடுவே தரைப்பாலம் அமைக்க பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஆனால் இதுநாள் வரை பணி தொடங்கப்படாமலும், அங்கு எந்த அறிவிப்பு பலகை வைக்கப்படாமலும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து, எழுந்து செல்வதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆபத்தான நிலையில் உள்ள இந்த பள்ளத்தை தினமும் கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே அசமப்பாவித சம்பவம் ஏற்படும் முன்பாக பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும் பணி தொடர்பான முன்அறிவிப்பு பலகை இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் இது தொடர்பானவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.