search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரஸ் வெற்றி"

    • சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.
    • ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு தொகுதி மக்களவை இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இதில் தற்போதைய நிலவரப்படி, கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

    இதில், சன்னபட்னா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர், மத்திய அமைச்சர் குமாரசாமி மகனை தோற்கடித்தார்.

    ஷிக்கானில் காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான், பாஜக எம்பி பசவராஜ் பொம்மையின் மகனை தோற்கடித்தார்.

    சந்தூர் தொகுதியில் காங்கிரஸ் எம்பி துக்காராம் மனைவி இ.அன்னபூர்ணா பாஜகவின் பங்காரா ஹனுமந்தாவை தோற்கடித்துள்ளார்.

    • அமோக வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைக்கவுள்ளது.
    • மாலையணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    ஓசூர்,

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில், காங்கிரல் கட்சி அமோக வெற்றிபெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கவுள்ளது.

    இதனை கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று எம்.ஜி.ரோடில் உள்ள காந்தி சிலைக்கு, மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் மாலையணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ந்தனர்.

    மேலும் இதில், மாநகர தலைவர் தியாகராஜன், சிவப்பா ரெட்டி, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜா, ஓ.பி.சி. பிரிவு நிர்வாகி குமார், கீர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஏராளமானோர் வாழ்த்து கோஷங்களை எழுப்பி, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

     கிருஷ்ணகிரி,

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை பிடித்துள்ளது.

    இந்த வெற்றியை கர்நாடகா மட்டுமின்றி தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று உற்சாகத்துடன் கொண்டாடினர். அதன்படி, கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, பழையபேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் லலித்ஆண்டனி முன்னிலை வகித்தார்.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, வக்கீல் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசுதுரை, மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் ஹரி ஆகியோர் பங்கேற்று, இனிப்புகளை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில், எஸ்சி, எஸ்டி துறை மாநில அமைப்பாளர் ஆறுமுகசுப்பிரமணி, முன்னாள் நகரத் தலைவர்கள் வின்சென்ட், ரமேஷ்அர்னால்டு உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து கோஷங்களை எழுப்பி, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.

    இதே போல் கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரில் நடந்த கொண்டாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அப்சல் வரவேற்புரையாற்றினார்.

    ஓ.பி.சி மாவட்ட தலைவர் ஆஜித்பாஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துறை தலைவர் ஷபீக்அகமத், குட்டி(எ)விஜயராஜ், இர்பான், மனித உரிமைத்துறை மாவட்ட தவைவர் நாகராஜ், மாவட்ட செயலாளர் சரவணகுமார், ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தினராக மரிநல பொதுச்செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் குமரேசன் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

    • முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
    • தர்மபுரி 4 ரோட்டில் மாவட்டத் தலைவர் முபாரக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தருமபுரி,

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி மெஜாரிட்டியுடன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

    இதனை வரவேற்று தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் அருகில் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், சண்முகம், ஜெயசங்கர் நகர தலைவர் வேடியப்பன், வட்டார தலைவர்கள் வெங்கடாச்சலம், ஞானசேகர், சிலம்பரசன், காமராஜ், பெரியசாமி, சந்திரசேகர்,மற்றும் சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் முபாரக் விவசாய அணி தலைவர் மணிகண்டன், நிர்வாகிகள் ஹரி, நடராஜன் ஏராளமானார் கலந்துகொண்டனர்.

    இதேபோல் ஐ.என்.டி.யூ சி. காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகிலும் மாவட்டத் தலைவர் மோகன் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் போக்குவரத்து பிரிவு பொதுச் செயலாளர் தங்கவேல், நிர்வாகிகள் ஆசிரியர் முத்து, ராஜேந்திரன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், எஸ்..சி.- எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சம்பத்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் தேவராஜ் தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று சிறுபான்மை பிரிவு சார்பில் தர்மபுரி 4 ரோட்டில் மாவட்டத் தலைவர் முபாரக் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பின்னர் அவர்கள் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் சபியுல்லா, சுரேஷ், ஆசிப், நகர தலைவர் சபீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மொரப்பூரில் வட்டாரத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    ×