search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கனடா குடியுரிமை"

    • பிப்ரவரி 26 அன்று டொரன்டோ விமான நிலையத்தில் பிஐஏ விமானம் தரையிறங்கியது
    • பணிப்பெண் சீருடையுடன் "நன்றி பிஐஏ" எனும் குறிப்பையும் மர்யம் விட்டுச் சென்றார்

    பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமானது, பிஐஏ எனப்படும் "பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை" (Pakistan International Airlines) நிறுவனம்.

    பிஐஏ-விற்கு சொந்தமான ஒரு விமானத்தில் பயணியர் சேவைக் குழுவில் பணி புரிந்து வந்தவர் "மர்யம் ராசா" (Maryam Raza).

    பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ (Toronto) நகருக்கு ஒரு பிஐஏ விமானம் சென்றது.

    இந்த விமானம் கடந்த பிப்ரவரி 26 அன்று டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    அந்த விமானத்தில் பணியாற்றிய மர்யம் ராசா, விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார்.

    மறுநாள் விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டிய மர்யம், பணிக்கு வரவில்லை.

    இதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று அதிகாரிகள் அவரை தேடினர்.

    முறையான காவல்துறை அனுமதி பெற்று மர்யம் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்து போது அங்கு, மர்யம் ராசாவின் விமான பணிப்பெண் சீருடையையும், "நன்றி பிஐஏ" (Thank You, PIA) எனும் குறிப்பையும் அவர் விட்டுச் சென்றது தெரிய வந்தது.

    சுமார் 15 வருடங்கள் பிஐஏ-வில் பணியாற்றியவர் மர்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விருப்பமில்லாத மர்யம் போன்ற பல பிஐஏ பெண் ஊழியர்கள் அடுத்தடுத்து கனடாவிற்குள் நுழைந்து தங்களை குறித்த தகவல்களை எவருக்கும் தெரிவிக்காமல் காணாமல் போகின்றனர்.

    பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியம் (IMF) கடனாக வழங்கும் நிதியிலும், சில உலக நாடுகள் அளிக்கும் கடனுதவியிலும் சமாளித்து வருகிறது.

    இதனால் எதிர்காலம் குறித்த அச்சத்தில் உள்ள பல துறைகளை சேர்ந்த வல்லுனர்களும், திறன் படைத்த ஊழியர்களும், கனடா போன்ற நாடுகளுக்கு சென்று, அகதிகளாக புகலிடம் தேடி, அங்கேயே தங்கி, புதிய வாழ்க்கையை தொடங்குவது தொடர்கதையாகி வருகிறது.

    கனடாவிற்குள் நுழைந்து மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பாமல் இருப்பது பிறரை காட்டிலும், விமான சேவையில் பணிபுரிபவர்களுக்கு இன்னும் எளிதாகிறது.

    அகதிகளாக நுழைபவர்களை ஆதரிக்கும் வகையில் கனடாவின் குடியுரிமை சட்டங்கள் உள்ளதே இதற்கு காரணம் என பிஐஏ தரப்பு தெரிவித்தது.

    ×