என் மலர்
நீங்கள் தேடியது "பதவிக்காலம்"
- ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார்.
- ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய ராணுவத் தளபதி ஜெனெரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் வரும் ஜூன் 30 உடன் முடிவடையும் நிலையில் அன்றைய தினம் புதிய தளபதியாக உபேந்திரா பதவியேற்பார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தற்சமயம் ராணுவத் துணைத் தலைவராக பணியாற்றிவரும் லெப்டினென்ட் உபேந்திரா, 1984 இல் தனது ராணுவ சேவையை ஜம்மு காஷ்மீர் காலாற்படையின் 18வது படையணியில் தொடங்கினார். கடந்த 39 வருட காலமாக ராணுவ சேவை ஆற்றி வரும் உபேந்திரா, காஷ்மீரிலும், ராஜஸ்தானிலும் திறமையான வகையில் தனது படையணியை வழிநடத்தியுள்ளார்.
மேலும் இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அசாம் ரைபிள்ஸ் படைக்கு கமாண்டராகவும், இன்ஸ்பெக்டர் ஜெனெரலாகவும் பணியாற்றியுள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ராணுவத் தலைமையகத்தில் துணைத் தலைவராகவும் லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில்தான் இந்திய ராணுவத்தின் 30 வது தளபதியாக லெப்டினென்ட் ஜெனரல் உபேந்திரா வரும் 30 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். முன்னதாக தற்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
- ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து உத்தரவு.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
துணை வேந்தருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
ஜெகநாதனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனின் பதவிக்காலத்தை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
ஜெகநாதன் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் பதவிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவிக்கால நீட்டிப்புக்கான உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருந்து ஜெகநாதன் பெற்றுக்கொண்டார்.
அதன்படி, ஜெகநாதனின் பதவிக்காலத்தை 2025ம் ஆண்டு மே மாதம் வரை நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.