search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச ஹோம் சீரியஸ்"

    • வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • முதல் தொடரில் வங்காளதேசம் அணியை இந்தியா எதிர் கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜுன் 29-ந் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடும் சர்வதேச ஹோம் சீசனுக்கான (2024-25) போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அந்த வகையில் வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    செப்டம்பரில் வங்காளதேசம் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் டெஸ்ட் தொடருடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27-ம் தேதியும் தொடங்குகிறது. 3 டி20 போட்டிகள் தரம்ஷாலா, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகள் முறையா புனே மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளது.

    அதை தொடர்ந்து 2025-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    ×