search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி.வி.எஸ்.லட்சுமண்"

    வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, யெலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி காலம் உலக கோப்பையுடன் முடிந்தது.

    இதைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமி (என்.சி.ஏ.) தலைவராக இருந்தார்.

    இந்த நிலையில் ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளரானதால் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரோடு என்.சி.ஏ. தலைமை நெருக்கமாக செயல்பட்டு வருகிறது.

    இந்த சூழலில் டிராவிட்டும், வி.வி.எஸ்.லட்சுமணும் இணைந்தால் இந்திய அணிக்கு நல்ல வீரர்கள் கிடைப்பார்கள். வலுவான தளம் அமைக்கப்படும். இதனால் வி.வி.எஸ். லட்சுமண் தேசிய கிரிக்கெட் அகடாமியின் தலைவராக பொறுப்பு ஏற்குமாறு கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி, யெலாளர் ஜெய்ஷா ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    ஆனால் லட்சுமணுக்கு சிறிய வயதில் குழந்தைகள் இருப்பதால் இந்த பதவியை ஏற்க தயக்கம் காட்டி வருகிறார். ஆனாலும் அவரை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. லட்சுமணும் ஒப்புக்கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் என்.சி.ஏ.வின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் வி.வி.எஸ். லட்சுமண்-ராகுல் டிராவிட் ஜோடி பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்த நிலையில் பயிற்சியாளர் தளத்திலும் இருவரும் சேர உள்ளனர்.

    ×