என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "SP Velumani Report"
- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை
- கோவை மக்களின் குடிநீர் ஆதரமாக விளங்குகிறது
கோவை,
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளரும், தமிழக முன்னாள் அமைச்சரும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணி வெளி யிட்டுள்ள அறி க்கையில் கூறியிருப்ப தாவது:-
சிறுவாணி குடிநீர் திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி பகுதி, 7 பேரூராட்சிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 28 கிராமங்கள் ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். இந்த நிலையில், நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை சற்று தாமதாக துவங்கியுள்ளது. சிறுவாணி அணயின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் மழைநீரை 50அடி வரை தேக்கி வைக்க முடியும். தற்போதைய நிலையில் 45அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க வாய்ப்புகள் இருந்தும், கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட்டு அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி உள்ளது. இதனால், அணையில் தற்போது 37அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் வரும் டிசம்பர் மற்றும் 2023 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து செயல்பட்டு சிறுவாணி அைணயில் 45அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசின் அத்துமீறலை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.