என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 94511
நீங்கள் தேடியது "நிலநடுக்கம்"
- இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது
- ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டன. இந்தியாவில் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்கள் அதிர்ந்தன.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணிக்கு ரிக்டர் அளவில் 4.3 புள்ளியில் நிலநடுக்கம் உண்டானது. இது 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.
சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஷாங்காய்:
ஷாங்காய்: சீனாவின் கிங்காய் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பங்கினியில் இருந்து 687 கிலோமீட்டர் தொலைவிலும், 72 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல்கல் ஏதும் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம் - பரபரப்பு வீடியோ
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெய்ஜிங்:
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பீஜிங், தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் தெரித்தது. பெய்ஜிங் நேரப்படி நேற்று மாலை 5 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகி உள்ளது. 17 கிமீ ஆழம் கொண்ட இந்த நிலநடுக்கம் 30.37 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 102.94 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் கண்காணிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த 3 நிமிடங்களுக்குப் பிறகு, யானிலும் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் அடுத்தடுத்த ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததுடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும் பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அதில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவரும் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பாக்சிங் கவுண்டியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 1,400க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் அப்பகுதிக்கு சென்றுள்ளதாகவும் சிச்சுவான் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தண்டவாளத்தின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் பயணிகள் ரயில்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தென்மேற்கு ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

×

X