search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.பாஸ்கர்"

    • தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா.
    • ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் தம்பி ராமையா. ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் ராஜாகிளி என்ற புதிய படத்தில் இணிந்து நடித்துள்ளனர்.

    'மாநாடு', 'கங்காரு', 'மிகமிக அவசரம்' உள்ளிட்ட படங்களை தயாரித்த வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் கதையின் நாயகனாக சமுத்திரக்கனியும், கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், பழ.கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், பிரவின்.ஜி, இயக்குனர் மூர்த்தி, 'கும்கி' அஸ்வின், ரேஷ்மா, வெற்றிக்குமரன், 'கும்கி' தரணி, தீபா, பாடகர் கிரிஷ், ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.

    இப்படத்திற்கு கதை , வசனம், திரைக்கதை, பாடல்வரிகள் மற்றும் இசையமைப்பாளராக தம்பி ராமையா பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.
    • கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

    இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பார்க்கிங்'.இருவருக்கு இடையில் வெடிக்கும் ஈகோ கிளாசை திரில்லிங் டிராமாவாக 'பார்க்கிங்' திரைப்படம் உருவாகியிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று கணிசமான அளவில் வசூலைக் குவித்தது.

    கர்ப்பிணி மனைவிக்காக கார் ஒன்றை வாங்கும் ஈஸ்வர் (ஹரிஸ் கல்யாண்). வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கு இருக்கும் இடத்தில் காரை பார்க் செய்வதால் இளம்பரிதிக்கு (எம்.எஸ்.பாஸ்கருக்கு) பைக்கை நிறுத்துவதில் சிரமமாகிறது. இதனால் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகள் ஈகோ மோதலாக வெடிக்கிறது.

     

    வம்புக்கு இளம்பரிதியும் ஒரு காரை வாங்க மோதல் இன்னும் தீவிரமடைகிறது. இதனால் அவர்களின் குடும்பம் எவ்வாறு பாதிக்கிறது என்பதே பார்க்கிங் படத்தின் 2 மணி நேர கதை. காமெடி ரோல்களில் மட்டுமின்றி சமீப காலங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்த எம்.எஸ்.பாஸ்கர் இந்த படத்திலும் ஈகோ கொண்ட சராசரி நபர் கதாப்பாத்திரதத்தில் மிரட்டியிருப்பார்.

    கோடி கோடியாக செலவு செய்து வில்லன்களை டெரராக காட்ட முன்னணி இயக்குநர்கள் திணறிக்கொண்டிருக்கும் வேலையில், கை பனியினும் லுங்கியும் அணிந்து சுவரில் ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு முறைக்கும் எம்.பாஸ்கரின் கேரக்டரை இயக்குனர் செதுக்கியிருப்பதே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும்.

     

    இந்நிலையில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமம் கணிசமான தொகைக்கு விற்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 5 மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதுமட்டுமின்றி சர்வதேச மொழி ஒன்றிலும் பார்க்கிங் படம் ரீமேக்காக உள்ளது தமிழ் சினிமாவுக்கு பெருமையான தருணமாக பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    தமிழ் சினிமாவின் பிரபல குணச்சித்திர நடிகரான எம்.எஸ்.பாஸ்கர், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
    ராமேஸ்வரம் அருகே உள்ள வடகாடு கடலோர பகுதியில் மீனவர்கள் கடல் பாசி எடுக்க செல்வது வழக்கம். மீனவ பெண் ஒருவர் கடல் பாசி எடுக்க சென்ற போது கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த செயலானது அப்பகுதியில் உள்ள இறால் கம்பெனியில் வேலை செய்யும் வட இந்தியர்களால் தான் நடந்துள்ளது என்று கூறப்படும் நிலையில் போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்பவத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

    எம்.எஸ்.பாஸ்கர்
    எம்.எஸ்.பாஸ்கர்

    இந்நிலையில் பிரபல குணசித்தர மற்றும் நகைச்சுவை நடிகருமான எம்.எஸ்.பாஸ்கர் இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் சமுக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர். அவர் கூறுகையில், “போனில் ஏமாற்றுவது.. வங்கிக்கொள்ளை, எடிஎம் இயந்திரத்தை உடைப்பது, கற்பழிப்பு, கொலை போன்ற சகல குற்றங்களிலும் வட இந்தியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீர விசாரித்து குற்றவாளிகள் யாராயினும், எத்தனை பேராயினும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
    ×