search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "whale vomit"

    • சர்வதேச சந்தையில் திமிங்கல வாந்தியின் மதிப்பு மிகவும் அதிகம்.
    • கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் 1-ம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் ரூ.6.20 கோடி மதிப்புள்ள 5.6 கிலோ திமிங்கல வாந்தியை (அம்பர்கிரிஸ்) போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    காரில் பைப்லைன் ரோட்டில் இருந்து பத்லாபூருக்கு திமிங்கல வாந்தியை கடத்த போவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் அக்டோபர் 1-ம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

    திமிங்கில வாந்தி (Ambergris) என்பது திமிங்கிலத்தின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு மிகவும் அதிகம்.

    இதனை பயன்படுத்தி வாசனை திரவியம், மருந்து மற்றும் மசாலாக்கள் தயாரிக்கபடுகிறது.

    இந்தியாவில் திமிங்கலம் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளதால் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இது பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் திமிங்கிலத்தின் வாந்தியை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.

    ×