சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என ஏற்கனவே நெல்சன் தெரிவித்திருந்தார். இதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
டிசம்பர் 12-ந்தேதி ரஜினிகாந்த் பிறந்த நாள் ஆகும். அன்றைய தினம் "ஜெய்லர் 2" படத்திற்கான ப்ரோமோவை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதற்கான "ப்ரோமோ சூட்" டிசம்பர் 5-ந்தேதி தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது. EVP-ல் அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.