அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
அரியானாவில் மகாவீர் போகத் என்ற மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியளித்து மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் இப்படம் எடுக்கப்பட்டது.
அண்மையில் மகாவீர் போகத்தின் இளைய மகளும் பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார்.
"எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுத்து அமீர் கான் 2000 கோடி சம்பாதித்தார். ஆனால் இதற்காக எங்கள் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது" என்று பபிதா போகத் தெரிவித்தார்.