சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது என்பது டிரண்ட் ஆகி வருகிறது. அப்படி விவாகரத்து வதந்திக்கு ஆளான ஜோடிதான் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி.
இந்நிலையில் அபிஷேக் பச்சன் செய்தி நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது, நான் பிறந்தவுடன் என் அம்மா நடிப்பதை நிறுத்திவிட்டார், ஏனென்றால் அவர் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட விரும்பினார்.
அப்பா [அமிதாப் பச்சன்] வீட்டில் இல்லாதபோது ஒரு வெற்றிடத்தை நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. என்று அவர் கூறினார். தொடர்ந்து ,மனைவி ஐஸ்வர்யா குறித்து பேசிய அபிஷேக், எனது வீட்டை பொறுத்தவரை நான் அதிஷ்டசாலி.
நான் வெளியில் பட வேலையாக செல்லும்போது ஐஸ்வர்யா வீட்டில் இருந்து ஆராத்யாவை கவனித்துக் கொள்கிறார். அதற்கு அவருக்கு மனமுவந்து நன்றி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.