மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் உள்ளிட்டோர் நடித்த பாம்பே படம் கடந்த 1995-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் தேர்வானாவர் நடிகர் விக்ரம்தான். படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் அவர் நடித்து வந்த விக்ரமனின் புதிய மன்னர்கள் படத்திற்காக தாடி வளர்த்திருந்திருக்கிறார் விக்ரம்.
மணிரத்னமோ தாடியையும், மீசையையும் ஷேவ் செய்யச் சொன்னாராம். அது மட்டும் முடியாது சார் என்று கூறி படத்தில் இருந்து விலகிவிட்டாராம் விக்ரம்.
மணி சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது எனக்கு கனவாக இருந்தது. அந்த படத்தை இழந்த பிறகு 2 மாதங்கள் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் படத்தை இழந்ததை நினைத்து அழுவேன். என தெரிவித்துள்ளார்.