திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் ஜோடியாக வந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றவர் நித்யாமேனன்
இந்த நிலையில் நித்யா மேனன் அளித்துள்ள பேட்டியில், "நான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களுக்கு எல்லோருடைய பாராட்டுகளும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன்.
நான் நடித்த கதாபாத்திரம் எனக்கு சந்தோஷத்தை கொடுத்தால் போதும் என்றுதான் நினைப்பேன். அதை மனதில் வைத்துதான் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறேன்.
அதிக செலவில் பிரமாண்டமாக தயாராகும் மசாலா படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நடிக்காமல் நிராகரித்து விடுவேன்.
நல்ல கதாபாத்திரமாக இருந்தால் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்வேன். என்றார்.