ரகுல் பிரீத் சிங் தலை தீபாவளி பண்டிகையை கொண்டாடிய நிலையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து தனது கருத்தை பகிர்ந்து இருந்தார்.
அவர் கூறும்போது 'சிறுவயதில் எனது தந்தை தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்க ரூ.500 கொடுத்தார். பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கும்.
எனவே பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லது இனிப்பு சாக்லெட் வாங்கலாம் என்றார். அவர் சொன்னது சரி என்று தோன்றியது. அன்று முதல் இன்று வரை நான் பட்டாசு வெடித்ததே இல்லை'' என்றார்.
இந்த பேச்சு வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து இணையதளத்தில் ரசிகர்கள் பலரும் விலை உயர்ந்த ஆடை அணிகிறீர்களே, சாதாரண உடை அணிந்து பணத்தை ஏழைகளுக்கு தானம் செய்வீர்களா?
நீங்கள் விலை உயர்ந்த உணவு சாப்பிடாமல் சாதாரண உணவை சாப்பிடலாம் இல்லையா? என்றெல்லாம் கடுமையாக விமர்சித்தும், அவதூறு செய்தும் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.