சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் புஷ்பா 2 தி ரூல் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்தின் தமிழ் ப்ரோமோஷனல் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைப்பெற்று வருகிறது.
நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன் கூறியதாவது " நான் பிறந்த இந்த மண்ணுக்குஅன்போடு வணக்கம். என் தமிழ் மக்களே, என் சென்னை மக்களே, இந்த நாள என்னால மறக்கவே முடியாது.
இந்த ஒரு நாளுக்காக எத்தனையோ வருடங்கள் காத்து கொண்டிருக்கிறேன். தேங்க் யூ, புஷ்பா திரைப்பட ப்ரோமோஷன் பணிகளுக்காக நான் பல தேசத்திற்கும், வெளிநாட்டிற்கும் சென்றேன். ஆனால் சென்னை வரும் போது அந்த உணர்வே வேறு.
சென்னையில் இருந்து தான் என் தொழிலை நான் தொடங்கினேன். என் முதல் 20 வருட வாழ்க்கையை நான் சென்னையில் தான் வாழ்ந்தேன்.
நான் எவ்வளவு சாதித்தாலும் அதை என்னுடைய ஆணி வேரான தமிழ் மண்ணுக்குதான் சமர்பிக்கிறேன். தமிழ எதாச்சும் தப்பா பேசியிருந்தா மன்னிசுருங்க. அனைவருக்கும் நன்றி" என கூறினார்.