இயக்குநர் பிளெஸ்சி இயக்கத்தில் பிருத்விராஜ் , அமலாபால் நடிப்பில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி வெளிவந்த படம் ஆடு ஜீவிதம்.
இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், சிறந்த பின்னணி இசைக்கான வெளிநாட்டு படப்பிரிவில் ஹாலிவுட் இசை மீடியா விருதை (HMMA) 'ஆடுஜீவிதம்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வென்றுள்ளார்.