சந்தானம் மேகா ஆகாஷ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, போன்ற பலர் நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் “வடக்குப்பட்டி ராமசாமி”
இப்படம் பிப்ரவரி 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சந்தானம் பற்றி பேசிய நடிகர் ஆர்யா, நானும் சந்தானமும் இணைந்து அட்வென்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம்" என்றார்.
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர்கள் கூட்டணி மறுபடியும் இணைய இருப்பது குறிப்பிடத்தக்கது.