இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா பிறந்தநாளையொட்டி 'நான் வயலன்ஸ்' படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.