வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
இந்த படத்தை கூல் சுரேஷ் பார்க்க வந்தார். இவர் எந்த ஒரு புதிய படம் ரிலீஸ் ஆனாலும் தவறாமல் வந்து வித்தியாசமான விமர்சனங்களை அளிப்பார்.
அதுவும் படத்தை பார்க்கும்போது படத்திற்கு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு ப்ராப்பர்ட்டியுடன் வந்து படத்தை புரொமோட் செய்வார். அந்த வகையில் இந்த படத்திற்கு ஒரு ஆட்டுடன் வந்தார்.
கோட் படம் புரமோஷனுக்காக ஆட்டை கொண்டு வந்தேன். தளபதியின் கோட்டு 2026-ம் ஆண்டு போடுங்க ஓட்டு. இவ்வாறு சுரேஷ் கூறினார்.