பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்பு மற்றும் அனைத்துக் கீரை வகைகளிலும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
வைட்டமின் டி
வைட்டமின் டி குறைவால் தைராய்டு சுரப்பியில் உள்ள தைரோ பெராக்சிடோஸ், தைரோகுளோபுலின் போன்றவை பாதிக்கப்படுகிறது. ஆகவே, விட்டமின் டி சத்துக் குறையாமல் பார்க்க வேண்டும்.
நமது தோலில் எந்த அளவுக்கு சூரிய ஒளிபடுகிறதோ, அந்த அளவிற்கு வைட்டமின் டி உடலில் உருவாகும். உணவு வகைகளில் முட்டை மஞ்சள்கரு, மத்திச்சாளை மீன், சூரை, கானாங்கெளுத்தி
இந்தியன் சால்மன் போன்ற மீன்களிலும், சிப்பி, பால் பொருட்கள், பாதாம், பிஸ்தா, இறைச்சி வகைகள் இவற்றிலிருந்தும் வைட்டமின் டி கிடைக்கும்.
அயோடின்:
தைராய்டு சுரப்பி செயல்படுவதற்கு அயோடின் மிக முக்கியமானது. கடல் உப்பு, கடல் மீன்கள், நண்டு, இறால், கணவாய், பால் பொருட்கள், முட்டை, இறைச்சி வகைகள், கடல் பாசிகள், ஸ்ட்ராபெர்ரி, க்ரான் பெர்ரி, அன்னாசிப் பழம் இவைகளில் இச்சத்து காணப்படுகிறது.
செலினியம்:
தைராய்டு சுரப்பியின் டி3, டி4 ஹார்மோன்கள் சுரப்பதற்கு செலினியம் ஒரு முக்கியமான பொருள். உணவுப் பொருட்களில், பூசணி விதை, பாதாம், பிரேசில் நட், முட்டை, பால் பொருட்கள், மீன், இறைச்சி இவைகளில் செலினியம் அதிகமாகக் கிடைக்கிறது.
மெக்னீசியம்:
தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோன் சுரக்க மெக்னீசியம் தேவை. டி4 தேவையான அளவு சுரந்தால் தான் உடலுக்குத் தேவைப்படும் டி3 ஹார்மோனாக மாற்றப்படும். ஆகவே, உணவில் மெக்னீசியம் குறைவில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பாதாம், வாழைப்பழம், பூசணி விதை, முந்திரிப் பருப்பு, வேர்க்கடலை, கருப்பு சாக்லேட், ரொட்டி, உருளைக்கிழங்கு, பால் பொருட்கள், இறைச்சி, மீன் வகைகளில் மெக்னீசியம் உள்ளது.
துத்த நாகம்:
மூளையின் ஹைப்போதலாமஸ் சுரக்கும் தைரோடிரோபின் ரிலீசிங் ஹார்மோன் சரியான அளவு சுரக்க துத்தநாகம் தேவை. கடல் சிப்பி, முந்திரிப்பருப்பு, பாதாம், வேர்க்கடலை, கொண்டக்கடலை
பூசணி விதை, கருப்பு சாக்லேட், இறைச்சி வகைகள், மீன் வகைகள், தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், மாதுளை பழம், கொய்யா, பெர்ரி வகைப் பழங்கள் இவைகளில் துத்தநாகம் அதிக அளவில் உள்ளது.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் சிகிச்சை காலங்களில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், ப்ராக்கோலி, டர்னிப் போன்ற காய்கறிகளை தவிர்ப்பது நலம்.