புது வசந்தம், பூவே உனக்காக, சூரியவம்சம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வானத்தை போல போன்ற படங்களின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்தவர் இயக்குநர் விக்ரமன்
தற்போது விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் "ஹிட் லிஸ்ட்" என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்
இந்த படத்தில் சரத்குமார், சித்தாரா, கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல முன்னணி நடிகர்களும் இயக்குநர்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்
இந்நிலையில் நடிகர் விஜய் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் விஜய் கனிஷ்கா ஆகியோரை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.