தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.