வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சில மணி நேரங்களில் புயலாக உருவாகிறது.
வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் நாளை புயலாகவே கரையை கடக்கும். நாளை பிற்பகல் புயல் கரையை கடக்கும். ஃபெங்கல் புயல் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும்போது 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும்.
புயல் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் அதிகனமழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் கூறினார்.