இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் 'பிரண்ட்ஷிப்'என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
இந்த நிலையில் தான் நடிக்கும் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது:-
என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் #Savior. உங்கள மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்...என்று கூறியுள்ளார்.
'சேவியர்' படத்தில் நடிகை ஓவியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாவும், இவர்களுடன் வி.டி.வி கணேஷ், ஜி.பி.முத்து, சிங்கம்புலி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.