நடிகர் ஜெயராம் -நடிகை பார்வதி ஆகியோரது மகனான காளிதாஸ் ஜெயராம் மீன் குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை போன்ற படங்களில் நடித்தார்.
இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகி தாரிணி காளிங்கராயனை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் குருவாயூர் கோவிலில் இன்று காலை நடை பெற்றது.
இந்நிலையில் திருமணம் நடைப்பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.