நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கங்குவா" இந்தப் படம் அடுத்த வாரம் உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில், கங்குவா படத்தை தயாரித்து இருக்கும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்க வாங்கிய ரூ. 99 கோடியே 22 லட்சம் கடனில் மீதமுள்ள ரூ. 55 கோடியை திரும்ப வழங்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து, வாங்கிய பணத்தை கொடுக்காமல் கங்குவா படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று ரிலையன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை நாளை வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
இதையடுத்து, வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ள காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேதியில் கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆகுமா என்பது நாளை தெரிந்து விடும்.