நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டார்.
தனது திருமண வீடியோ 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருப்பதற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய கஸ்தூரி ராஜா, "எங்களுக்கு வேலை தான் முக்கியம். நிற்க நேரமில்லாமல் நாங்கள் ஓடி கொண்டிருக்கிறோம். எங்கள் முதுகுக்கு பின்னால் பேசுபவர்கள் குறித்து பதில் கூற எங்களுக்கு நேரமில்லை.
"நயன்தாரா தடையில்லா சான்றிதழ் பெற 2 ஆண்டுகள் தனுசுக்காகக் காத்திருந்ததாக கூறியது எல்லாம் பொய். இது தொடர்பாக இதற்கு மேலும் பேச எனக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்தார்.