சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பாலா இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல நலத்திட்ட உதவிகளையும் மக்களுக்கு செய்து வருகிறார்
நடிகர் விஜயின் அரசியல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு இவர் “விஜய் சார் பீக்கில் இருப்பவர், நான் வீட்டில் இருப்பவன்”, அவர் பற்றி பேசுவதற்கு எனக்கு தகுதி இல்லை அரசியலில் சேரும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை மூளையும் இல்லை
எனக்கு சேவை மட்டும் போதும் நான் பத்து ஆம்புலன்ஸ் தருவதாக கூறினேன், அதில் ஐந்து முடித்துவிட்டேன் மீதியையும் கொடுத்துவிடுவேன் இது முடித்துவிட்டு இன்னொரு இலக்கு இருக்கிறது அதை நோக்கி பயணிப்பேன் என்றார்