சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் தி லெஜன்ட் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை.
இதனையடுத்து அவரது அடுத்த படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார். துரை செந்தில்குமார் இயக்கிய கருடன் படம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்க்கான படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி மற்றும் வட மாநிலங்களிலும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
இந்த படப்பிடிப்பு தொடர்பான காட்சிகளை இந்த படத்தின் ஹீரோவான சரவணா சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரலுக்கு திரைக்கு வரும்.