லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இதனால் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யு.வில் ஏற்கெனவே இருக்கும் கைதி டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த 'பென்ஸ்' கதாபாத்திரமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்கட்சி சேர மற்றும் ஆசை கூட போன்ற இண்டிபெண்டண்ட் பாடலை இசையமைத்து பாடிய சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையைக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.