குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் தற்பொழுது விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார்
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்
இத்திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி வெளியாகியது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. படம் தற்பொழுது 85 கோடி வசூல் செய்துள்ளது
இந்நிலையில், சமீபத்தில் மகாராஜா திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் அப்படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் மற்றும் தயாரிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.