நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேட்டையன்'. இயக்குநர் ஞானவேல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ஸ்ருதி ஹாசன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி, ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், ஓடிடி தளத்தில் 'வேட்டையன்' படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த நிலையில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 7-ந்தேதி அமேசான் பிரைம் 'வேட்டையன்' படத்தை ஓடிடியில் வெளியிடுகிறது. டிஜிட்டல் உரிமையை ரூ.90 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.