ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
ரம்யா கிருஷ்ணன் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து 2003-ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் ரம்யா கிருஷ்ணனும், கிருஷ்ண வம்சியும் பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்து பிரிய இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது
இதற்கு விளக்கம் அளித்துள் கிருஷ்ண வம்சி, "நான் படப்பிடிப்புகளுக்காக ஐதராபாத்தில் இருக்கிறேன். ரம்யா கிருஷ்ணன் சென்னையில் இருக்கிறார். இதை வைத்து நாங்கள் பிரிய இருப்பதாக வதந்திகள் பரப்பி உள்ளனர்.
இதில் உண்மை இல்லை. நாங்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வருகிறோம். நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம். என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.