புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ள நிலையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா பீகாரில் கடந்த வாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது மேடை ஏறிய கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவிடம் தொகுப்பாளர் கேள்வி ஒன்றை கேட்டார்.
நீங்கள் திரைத்துறையில் இருப்பவர்கள் யாரையாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா அல்லது திரைத்துறைக்கு வெளியிலிருந்து மாப்பிளை தேடுகிறீர்களாஎன்று கேள்வி கேட்டார்.
இதற்கு சிரித்தபடி பதிலளித்த ராஷ்மிகா, எல்லோருக்கும் அதைப் பற்றி தெரியும் என்று சிம்பிளாக பதிலளித்தார்.
விஜய் தேவரக்கொண்டா ராஷ்மிகா ரிலேஷன்ஷிப் குறித்து அரசல் புரசலாக திரை வட்டாரங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு இருந்து வரும் நிலையில் கூறியிருப்பது அவர்களின் உறவை உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிகிறது.